2025 Wedding Muhurtham Days - திருமண முகூர்த்தம் நாட்கள்
வரிசை எண் | தேதி |
---|---|
1 | 04-09-2025 வியாழன் (Thursday) |
2 | 14-09-2025 ஞாயிறு (Sunday) |
Valarpirai Muhurtham Days வளர்பிறை முகூர்த்த நாட்கள்

Sunday Muhurtham Days ஞாயிறு முகூர்த்த நாட்கள்

Other Muhurtham Days மற்ற முகூர்த்த நாட்கள்
Wedding Muhurtham - திருமண முகூர்த்தம்
திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்.
அதிலும் கூட மகேந்திர பொருத்தம், வசியப் பொருத்தம் போன்றவை இல்லற வாழ்க்கையை குறிக்கிறது. இவை கண்டிப்பாக பொருந்த வேண்டும் என்று ஆண், பெண் இரு வீட்டார் எதிர்பார்ப்பது இயல்பு. இப்படி ஆண், பெண் இராசி, ஜாதகம் பொருந்தி அமைந்தால் தான் திருமணம் என்று ஓர் பெரிய கணிதக் கோட்பாடே எழுதி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.
பத்து பொருத்தங்கள் என்னென்ன?
தினப்பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திரப்பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதிப் பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜூ (அ) ரச்சுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் என்பன ஆகும்.
1.தினப்பொருத்தம்
தினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்பார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.
2.கணப் பொருத்தம்
குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம் தான் குணப் பொருத்தம். மனைவியாக / கணவனாக வரப்போகும் நபர் எப்படிப்பட்ட குணம் கொண்டிருப்பார் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.
3.மகேந்திரப் பொருத்தம்
திருமணம் ஆகப்போகும் ஆண், பெண்ணுக்கு இந்த பொருத்தம் மிகவும் முக்கியம். இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
4.ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் பெருக பார்க்கப்படும் பொருத்தமாகும். அதனால், இந்த பொருத்தமும் கூட ஓர் முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.
5.யோனிப் பொருத்தம்
யோனிப் பொருத்தம் முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக் கூடியது பொருத்தம் தான் யோனிப் பொருத்தம். இந்த பொருத்தம் இருவருக்கும் ஒத்துப் போக வேண்டியது அவசியம்.
6.ராசிப் பொருத்தம்
பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு எனப்படுகிறது. ஆனால் அனுபவத்தில் சிலர் ஒரே ராசி என்றால் கூட அது உத்தமம் தான். ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும் இந்த பொருத்தம் முக்கியம்.
7.ராசி அதிபதிப் பொருத்தம்
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் தான் ராசி அதிபதிப் பொருத்தம். பன்னிரண்டு இராசிக்கும் அதிபதி உண்டு அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையில் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. இதில் ஆண், பெண் இராசிக்கு இடையில் பகை தவிர மற்ற இரண்டு இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.
8.வசியப் பொருத்தம்
கணவன், மனைவி இருவருக்குள் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் உதவுகிறது. இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஈர்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
9.ரஜ்ஜூ (அ) ரச்சுப் பொருத்தம்
இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
10.வேதைப் பொருத்தம்
திருமணம் செய்யப் போகும் தம்பதியர் வாழ்க்கையில் இன்ப - துன்பங்கள் எவ்வாறு அமையும், எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த வேதைப் பொருத்தம்.
Page Quick Links
இந்து விரத நாட்கள்
பஞ்சாங்கம்
Comments
Recent Comments:
23-07-2025 09:32 AM
This calendar is very useful for navigating to any date.
எதையும் தாங்கும் மனவலிமை ஒன்று உனக்குள் இருந்தால், தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்.