கிருத்திகை நாட்கள் என்றால் என்ன?
கார்த்திகை நட்சத்திரம் என்பது வானத்தில் காணப்படும் 27 நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம். இந்த நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு கூட்டமாகத் தோன்றும். புராணங்களில் முருகப் பெருமானை 6 கார்த்திகை பெண்கள் வளர்த்து ஓர் உருவமாக மாற்றியதாக சொல்வார்கள். 6 நட்சத்திரங்களை கொண்ட கூட்டம் என்பதும் புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதும் பொருந்திப்போவதை பாருங்கள். எவ்வளவு சிறப்பு அல்லவா.. கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் இந்த நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். கார்த்திகை நட்சத்திரம் மேஷ ராசியின் ஒரு பகுதியிலும், ரிஷப ராசியின் பெரும்பாலான பகுதிகளிலும் அமைந்துள்ளது.
இந்த நட்சத்திரம் அக்னி தேவனின் அம்சமாகக் கருதப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக தைரியமானவர்களாகவும், அறிவாற்றல் மிக்கவர்களாகவும், மற்றவர்களை வழிநடத்துபவர்களாகவும் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
கார்த்திகை மாதத்தில் இந்த நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது, கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த நட்சத்திரம் ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
2025 Krithigai Days - கிருத்திகை நாட்கள்
வரிசை எண் | மாதம் | தேதி |
---|---|---|
1 | ஜனவரி 9 | 09-01-2025 வியாழன் (Thursday) |
2 | பிப்ரவரி 6 | 06-02-2025 வியாழன் (Thursday) |
3 | மார்ச் 5 | 05-03-2025 புதன் (Wednesday) |
4 | ஏப்ரல் 1 | 01-04-2025 செவ்வாய் (Tuesday) |
5 | ஏப்ரல் 29 | 29-04-2025 செவ்வாய் (Tuesday) |
6 | மே 26 | 26-05-2025 திங்கள் (Monday) |
7 | ஜூன் 22 | 22-06-2025 ஞாயிறு (Sunday) |
8 | ஜூலை 20 | 20-07-2025 ஞாயிறு (Sunday) |
9 | ஆகஸ்ட் 16 | 16-08-2025 சனி (Saturday) |
10 | செப்டம்பர் 12 | 12-09-2025 வெள்ளி (Friday) |
11 | அக்டோபர் 10 | 10-10-2025 வெள்ளி (Friday) |
12 | நவம்பர் 6 | 06-11-2025 வியாழன் (Thursday) |
13 | டிசம்பர் 3 | 03-12-2025 புதன் (Wednesday) |
14 | டிசம்பர் 31 | 31-12-2025 புதன் (Wednesday) |
Page Quick Links
இந்து விரத நாட்கள்
பஞ்சாங்கம்
Comments
Recent Comments:
23-07-2025 09:32 AM
This calendar is very useful for navigating to any date.
எதையும் தாங்கும் மனவலிமை ஒன்று உனக்குள் இருந்தால், தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்.