ராகு காலம் என்பது என்ன? - What is Mean by Rahu Kalam

ராகு காலம் ஒரு குறிப்பிட்ட நேரத்தை குறிக்கும், இது ஒரே நாளில் ஒரு சில நேரங்களில் மட்டும் வரும். ராகு காலம் என்பது ராகு என்ற கிரகத்தின் தீய ஆற்றல்களை பிரதிபலிக்கிறது. இது பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நிகழும். (சரியாக ஒரு நாளில் 90 நிமிடங்கள் இருக்கும்). இந்த நேரத்தில் புதிய வேலைகள் தொடங்குவது, பயணங்கள் மேற்கொள்ளுவது அல்லது முக்கியமான முடிவுகள் எடுப்பது போன்றவைகளை தவிர்க்க வேண்டும் என்று ஜோதிடர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது எப்போது நிகழும்?

ராகு காலம் தினமும் ஒரே நேரத்தில் ஏற்படும், ஆனால் அந்த நேரம் ஒவ்வொரு நாளும் மாறுபடும். இது, உதாரணமாக, காலை 7:30 முதல் 9:00 வரை, பிற்பகல் 4:30 முதல் 6:00 வரை என்ற அளவில் இருக்கும்.

குளிகை என்பது என்ன? - What is Mean by Kuligai

குளிகை என்பது ஒரு குறிப்பிட்ட நேரம் ஆகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு உகந்ததாகவும் ஈமச்சடங்கு முதலிய கெட்ட காரியங்களுக்குப் பொருத்தமற்றதாகவும் கருதப்படும் ஒரு ஒன்றரை மணி நேர காலமே குளிகை காலம் ஆகும். குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும். ஆகையால் கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்ய கூடாது. கடனை திருப்பி கொடுப்பது, வீடு அல்லது நகை வாங்குவது போன்ற காரியங்களை செய்வதால் அது வளர்ந்துகொண்டே செல்லும் அதோடு எந்த தடையும் இல்லாமல் சுபமாக முடியும்.

எமகண்டம் என்பது என்ன? - What is Mean by Yemagandam

எமகண்டம் ஒவ்வொரு நாளும் ஒன்னரை மணி நேரம் வருகிறது. இந்த நேரம் எமனுக்கு ஏற்ற நேரமாக கருதப்படுகிறது. எமகண்ட நேரத்தை கெட்ட நேரமாக கருதப்படுகிறது. ராகு காலம் போன்றே இந்த நேரமும் கெட்ட நேரமாக கருதப்படுகிறது. எமனால் ஆளப்படுகின்ற ஒன்றரை மணி நேரம் எமகண்டம் என்றழைக்கப்படுகிறது. இந்த நேரத்திலும் சுபகாரியங்களை தொடங்க கூடாது.

ராகு, குளிகை, எமகண்டம் அட்டவணை

கிழமை ராகு காலம் குளிகை நேரம் எம கண்டம் வார சூலை பரிகாரம்
ஞாயிறு 4:30 - 6:00 3:00 - 4:30 12:00 - 1:30 மேற்கு வெல்லம்
திங்கள் 7:30 - 9:00 1:30 - 3:00 10:30 - 12:00 கிழக்கு தயிர்
செவ்வாய் 3:00 - 4:30 12:00 - 1:30 9:00 - 10:30 வடக்கு பால்
புதன் 12:00 - 1:30 10:30 - 12:00 7:30 - 9:00 வடக்கு பால்
வியாழன் 1:30 - 3:00 9:00 - 10:30 6:00 - 7:30 தெற்கு தைலம்
வெள்ளி 10:30 - 12:00 7:30 - 9:00 3:00 - 4:30 மேற்கு வெல்லம்
சனி 9:00 - 10:30 6:00 - 10:30 1:30 - 3:00 கிழக்கு தயிர்

Page Quick Links

Comments


Recent Comments:
vikram
23-07-2025 09:32 AM

This calendar is very useful for navigating to any date.

இன்றைய வாசகம் - 09.09.2025 Tue

எதையும் தாங்கும் மனவலிமை ஒன்று உனக்குள் இருந்தால், தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்.