Numerology Chart - எண் கணித விளக்கப்படம்
எண் கணிதம் என்றால் என்ன?
உங்களின் பிறந்த தேதியை வைத்து சில எண்களின் பொதுவான குணங்களை ஜோதிடா வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதற்காக எழுதப்பட்ட ஒரு சாஸ்திர முறை தான் எண் கணிதம். 'எண்களை' கொண்டு உங்கள் எண்ணங்களை நிறைவேற்றும் கணித சாஸ்திரம். இதனை ஆங்கிலத்தில் Numerology என்பார்கள்.
இந்தப் பிரபஞ்சமே அணுக்களின் எண்ணிக்கையில் தான் ஆக்கப் பட்டு இருக்கிறது. நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் எண்கள் தான் முக்கியப் பங்கை வகித்துக் கொண்டு இருக்கிறது. உதாரணமாக,' உங்கள் வயது என்ன?, உயரம் என்ன? எவ்வளவு தூரம்?' எவ்வளவு எடை? என இந்த அனைத்துக் கேள்விகளுமே எண்களை மையமாக வைத்து தான் அமைந்து உள்ளது.
மனித வாழ்க்கையில் எண்களும் எழுத்துக்களும் எதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ளன என்பதை “எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்” என்கிற பழமொழி உணர்த்துகிறது.
எண் கணிதம் வைத்து வாழ்க்கைக்கு தேவையான பிரதானமான பலன்களை ஜோதிட சாஸ்திரம் போல கூற முடியாது என்றாலும் நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம்.
எண் கணித ஜோதிடத்தில் விதி எண் மற்றும் பெயர் எண் என உண்டு. விதி என்னைக்கொண்டு பெயர் என்னை தேர்வு செய்தல் நல்லது.
நாம் பிறந்த தேதியினை கொண்டு விதி எண் கணக்கிட வேண்டும். அதேபோல எந்த எண்ணில் பெயர் வைக்க வேண்டும் என்பதை விதி எண் பொறுத்து எந்த எண்கள் நட்பு மற்றும் பகை என்றும் அவற்றை கணிதத்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதை விரிவாக பார்ப்போம்.
ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள்
ஆளுமை எண் | ஆங்கில எழுத்து | ||||
---|---|---|---|---|---|
1 | A | I | J | Q | Y |
2 | B | K | R | ||
3 | C | G | L | S | |
4 | D | M | T | ||
5 | E | H | N | X | |
6 | U | V | W | ||
7 | O | Z | |||
8 | F | P |
மேற்கூறிய அட்டவணைப்படி எண் 8 வரை ஆளுமைக்குட்பட்ட எழுத்துக்கள் இருக்கும். எண் 9ன் ஆளுமைக்குட்பட்ட எழுத்துக்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
எண்களும் கிரகங்களும்
கிரகம் | எண் |
---|---|
சூரியன் | 1 |
சந்திரன் | 2 |
குரு | 3 |
ராகு | 4 |
புதன் | 5 |
சுக்கிரன் | 6 |
கேது | 7 |
சனி | 8 |
செவ்வாய் | 9 |
மேற்கூறிய அட்டவணையில் ஒவ்வொரு எண்ணிற்கும் அதனுடைய ஆதிக்க கிரகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
விதி எண் கணக்கிடுவது எப்படி?
ஒரு ஜாதகரின் பிறந்த ஆங்கில தேதியில் வரும், தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையே அந்த ஜாதகரின் விதி எண் ஆகும்.
உதாரணமாக. 30.01.1985 என்ற தேதியில் ஒருவர் பிறந்திருக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள் 3+0+0+1+1+9+8+5 = 27 என வரும் 2+7=9 எனவே இந்த ஜாதகரின் விதி எண் 9 ஆகும். அடுத்து பெயர் எண் என்றால் என்ன என்று பார்ப்போம்.
பெயர் எண் கணக்கிடுவது
ஒரு ஜாதகரின் பெயரை கொண்டு கணக்கிடுவதே பெயர் எண் ஆகும். ஜாதகரின் பெயர் Y SANTHOSH என வைத்துக்கொள்வோம். மேற்கூறிய அட்டவணையில் எழுத்துக்கான எங்களை கொண்டு பெயர் எண் கணக்கிட வேண்டும்.
GLOREX
calculate
3+3+7+2+5+5=25; 2+5=7
எனவே இந்த ஜாதகருடைய பெயர் எண் 7 ஆகும். பெயருக்கான எண்ணை கணக்கிடும்பொழுது வழக்கமாக பெயரை எப்படி எழுதுகிறோமோ அப்படிதான் எழுத வேண்டும். பெயருக்கு முன்னாள் மிஸ்டர், மிஸ், திருமதி, திரு, ஸ்ரீ, ஸ்ரீமதி மற்றும் பெயர்க்கு பின்னால் வரும் பட்டங்களையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு ஒருவருடைய விதி எண் கொண்டு அதே எண் மற்றும் அதற்கு நட்பு எண் வரும்படி பெயரை அமைக்க ஜாதகரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பின்வரும் அட்டவணையில் எண்ணிற்கு வரும் நட்பு எண்ணை காண்போம்.
எண் 1 - நட்பு எண் 4
எண் 2 - நட்பு எண் 7
எண் 3 - நட்பு எண் 9
எண் 4 - நட்பு எண் 1
எண் 5 - நட்பு எண் 6
எண் 6 - நட்பு எண் 9
எண் 7 - நட்பு எண் 2
எண் 8 - நட்பு எண் 5
எண் 9 - நட்பு எண் 6
குழந்தைக்கு பெயர் தேர்வு செய்யும்பொழுது குழந்தையின் விதி எண் கணக்கிட்டு பின்பு அதே எண் அல்லது அதனுடைய நட்பு எண் வரும்படி பெயர் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Page Quick Links
இந்து விரத நாட்கள்
பஞ்சாங்கம்
Comments
Recent Comments:
23-07-2025 09:32 AM
This calendar is very useful for navigating to any date.
எதையும் தாங்கும் மனவலிமை ஒன்று உனக்குள் இருந்தால், தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்.