சிவராத்திரி என்றால் என்ன?
சிவனுக்கு 5 சிவராத்திரிகள் உள்ளன. அதாவது யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, மாச சிவராத்திரி, ஆண்டுதோறும் வரும் மகா சிவராத்திரி ஆகும்.
சிவனுக்குரிய இரவு என்பதாகும். மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்தசியில் வரும். ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவதே இந்த சிவராத்திரியின் நோக்கமாகும். உணவையும் தூக்கத்தையும் கட்டுப்படுத்துவது.
இந்த சிவராத்திரி என்பது ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் கொண்டாடப்படுவதாகும். அதாவது குளிர்காலத்தில் இருந்து வசந்த காலத்திற்கு வருவதை உணர்த்தும் ஒரு பூஜை ஆகும்.
அந்த வகையில் இந்த ஆண்டு சிவராத்திரி எப்போது என்பதில் சிலருக்கு குழப்பங்கள் இருக்கின்றன. அதாவது பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 12.09 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் 27ஆம் தேதி நள்ளிரவு 12.59 மணி வரை அனுசரிக்கப்படுகிறது.
சிவராத்திரியின் போது அனைத்து சிவன் கோயில்களிலும் 4 கால பூஜை நடைபெறும். காலையில் குளித்து முடித்துவிட்டு எதையும் உண்ணாமல் விரதம் இருந்து 4 கால பூஜைகள் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விரதத்தை கலைக்க வேண்டும்.
விரதத்தின் போது சிவ நாமத்தை சொல்ல வேண்டும். திருவாசகம் படிக்கலாம். சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இரவு முழுவதும் பக்தர்கள் கோயிலிலேயே இருப்பார்கள். ஒவ்வொரு கோயிலிலும் நடக்கும் பூஜைகளில் கலந்து கொண்டு சிவனின் ஆசிர்வாதத்தை பெறுவார்கள்.
சிவராத்திரிக்கு எப்போது கண் விழிப்பது என்பது சிலருக்கு சந்தேகம் இருக்கும். நாளை காலை குளித்துவிட்டு நீராகாரத்தை சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். பின்னர் மாலை சிவனின் படத்திற்கோ சிலைக்கோ அபிஷேகம் செய்யலாம், நெய்வேத்தியம் செய்யலாம்.
2025 Shivratri Days - சிவராத்திரி நாட்கள்
வரிசை எண் | மாதம் | தேதி |
---|---|---|
1 | ஜனவரி 9 | 09-01-2025 வியாழன் (Thursday) |
2 | பிப்ரவரி 6 | 06-02-2025 வியாழன் (Thursday) |
3 | மார்ச் 5 | 05-03-2025 புதன் (Wednesday) |
4 | ஏப்ரல் 1 | 01-04-2025 செவ்வாய் (Tuesday) |
5 | ஏப்ரல் 29 | 29-04-2025 செவ்வாய் (Tuesday) |
6 | மே 26 | 26-05-2025 திங்கள் (Monday) |
7 | ஜூன் 22 | 22-06-2025 ஞாயிறு (Sunday) |
8 | ஜூலை 20 | 20-07-2025 ஞாயிறு (Sunday) |
9 | ஆகஸ்ட் 16 | 16-08-2025 சனி (Saturday) |
10 | செப்டம்பர் 12 | 12-09-2025 வெள்ளி (Friday) |
11 | அக்டோபர் 10 | 10-10-2025 வெள்ளி (Friday) |
12 | நவம்பர் 6 | 06-11-2025 வியாழன் (Thursday) |
13 | டிசம்பர் 3 | 03-12-2025 புதன் (Wednesday) |
14 | டிசம்பர் 31 | 31-12-2025 புதன் (Wednesday) |
Page Quick Links
இந்து விரத நாட்கள்
பஞ்சாங்கம்
Comments
Recent Comments:
23-07-2025 09:32 AM
This calendar is very useful for navigating to any date.
எதையும் தாங்கும் மனவலிமை ஒன்று உனக்குள் இருந்தால், தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்.